Thursday, November 13, 2008

மெக்கைன், சாரா பாலின் மற்றும் பிரபுதேவா



மிக நகைச்சுவையான 'Benny lava' வீடியோ கிளிப். பிரபுதேவா அமெரிக்கா கண்டத்தில் புகழ் பெற காரணமாய் இருக்கும் பாடல். அமெரிக்கர்களின் தயவில் ஒரு கோடி ஹிட்ஸ் ஐ நெருங்கி கொண்டிருக்கும் YOUTUBE Clip இது. 'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் வரும் பாடலை அப்படியே ஆங்கிலத்தில் Transliterate செய்திருக்கிறார் ஒகியோவை சேர்ந்த 'மைக் சுட்டன்' ( Mike Sutton). இவர் 'யூடூப்'-ல் 'Bufallax' என்ற பெயரில் செயல்பட்டுவருகிறார். இவர் மேலும் பல இந்திய மற்றும் வெளிநாட்டு பாடல்களை இவ்வாறு செய்திருக்கிறார்.
Mike suttans's interview ::http://www.wired.com/entertainment/theweb/news/2007/11/buffalax
Mike suttan's Youtube channel :: http://in.youtube.com/user/buffalax



பிரபுதேவாவை மிக சிறந்த டான்சர் என்று நினைபவர்களுக்கு அவரை பற்றிய மேலை நாட்டவரின் கமெண்ட்ஸ் கொஞ்சம் அதிர்ச்சியை தரும். அத்தகைய பிரபுதேவா ரசிகர்கள் அது பாடலில் வரும் 'sub-title' காரணமாக என்று கொள்ளலாம். மற்றவர்கள் அந்த கமெண்டுகளை இந்திய திரை இசை டூயட் பாடல்கள் பற்றிய பிற நாட்டவர்களின் பார்வையாக கொள்ளலாம்.
எப்படியோ பிரபுதேவா 'Benny lava' என்ற பெயரில் உலக புகழ் பெற்றுவிட்டார்.




'கல்லூரி வானில்...' பாடலை மெக்கைன் மற்றும் சாரா பாலின் வைத்து உல்டா செய்திருக்கிறார்கள். அதையும் பாருங்கள்.





4 comments:

josh said...

Very Funny, Karthi. That song is original?

சிறில் அலெக்ஸ் said...

too good. loved the english lyrics. "Benny lava" haha

Karthikeyan G said...

Yes Josh.. 'கல்லூரி வானில்...' is original tamil song..

Karthikeyan G said...

Josh, Cyril Alex... thanks for visiting.