Saturday 22 January 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்



வாசகர் கடிதம்

அன்பு கார்த்தி ,
தமிழ்க் கவிதையின் வளம் அளப்பரியது . அனால் சமகாலக் கவிதைகளில் சில தேக்கம் இருக்கிறது .
இருப்பினும் தங்கள் கவிதைகள் அவற்றில் இருந்து மாறுபட்டது . எனவே தான் தங்களைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறேன் . ஒரு நல்ல கவிதை ஆளுமையை தமிழ்ச் சமூகம் இழக்கக் கூடாது என விரும்புகிறேன் . நல்ல கவிஞனை எப்போதும் தமிழ்ச் சமுகத்தில் பாராட்டமாட்டார்கள். பாரதிக்கும் அதுதான் நேர்ந்தது. அனால் அவன் தளரவில்லை. நீங்களும் அப்படி எழுத பணிவுடன் வேண்டுகிறேன் . ஏனெனில் உங்கள் கவிதை வளத்தைப் பெரிதும் நேசிக்கிறேன் . ஆதலால் சொல்கிறேன்.

...மரணதினும் கொடிது
மரண வாழ்க்கை .
பறவையின் கோதலில்
கழன்று அந்தரத்தில் தவழும்
ஒரு இறகைப் போல
காலத்தில் கரைய எத்துனை நாள்
மலர்ந்துகொண்டிருப்பது .
கனிகளின் காலம் எப்போதும் அந்திதான்.
பித்தம் பூக்கும்
உதய நாழிகை
உப்புக்கடல்தான்

அன்புடன்
சவகர்


சில எண்ணங்கள் :

- இந்த பதிவில் எழுத்துப் பிழை இருந்தால் அதைப் பற்றி என்னிடம் தெரிவிக்க வேண்டாம்.

- அன்பரின் இந்த கடிதத்தை படித்தவுடன் எப்படியாவது தினமும் நிறையா எழுதவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். இந்த கடிதம் வந்து ஆறு மாதம் ஆகிறது, ஒன்றும் எழுதவில்லை, அதனால் என்ன.. முடிவை மெதுவாய் செயல்படுத்தலாம்.. அனால் முடிவெடுத்தது எடுத்ததுதான்.

- கடிதம் எழுதிய ஜவகர் அண்ணனுக்கு போன் செய்து ‘ஏன்ணா?’ என கேட்டதற்கு அட்டகாசமாய் சிரித்தார்.

- வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவும்.

- ’சில எண்ணங்கள்’ என்பது கவிதையின் தலைப்போ, அதற்கு கீழ் இருக்கும் இவை கவிதையோ கிடையாது.

5 comments:

Raju said...

இது பின்னூட்டமாக இருக்கலாம்.
ஆனால், பின்னூட்டதலின் இலக்கணத்தை மீறியதாவென்பதைக் குறித்த மேலதிக தகவல்களில்லை.
:-)

பின்குறிப்பு: என் வீட்டு குளியலறை ஷவரில் இன்று நீர் வரவில்லை. நாளையாவது வரவேண்டும்.

Ashok D said...

அண்ணா.. கண்டிப்பா திமுகவுக்கு போட்டுர்றேன்...

எப்டியோ இது மாதியாவது தொடர்ந்து பதியவும்.. ஏன்னா ரொம்போ போரடிக்குது வலை :)

Ashok D said...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ’படம்’ கவிதை

முன்பிப்படி இருந்தது
இந்த மரத்துக்கு புரியுமா
என்றது கதவு
சுற்றி நின்று காவல் காத்தன
முன்பு மூங்கிலாய்
இருந்த வேலி

தலைப்பு செதுக்கப்பட்ட அன்புன்னு போட்டக்குங்க.

நம் வாழ்வும் சில சமயங்களில் இந்த கதவைப்போலத்தான் மாறிவிடுகிறது....

ஆயில்யன் said...

//
- ’சில எண்ணங்கள்’ என்பது கவிதையின் தலைப்போ, அதற்கு கீழ் இருக்கும் இவை கவிதையோ கிடையாது//

இதை முன்னாடி டிஸ்கியாக போட்டு தொலைத்திருக்கலாம் நான் கவிதை என்றேன் நினைத்து கமிட்டாகி படித்தும் விட்டேனே என்னசெய்வது?!
#ஙே’வாக மீ த சிட்டிங்

Prakasam said...

புதிய தலைமுறை
IF (கார்த்தி =பாரதி ) THEN
சுரீந்தர் அண்ணாச்சி = பாரதி தாசன்
END IF;