Friday 23 April 2010

மனதின் ரகசிய அறைகள்.

'பேண்டசி' (fantasy) பற்றி எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது. இந்த 'பேண்டசி' (fantasy)பலவிதங்களிலும் நமது தேவைகளை பூர்த்திசெய்வதாக இருக்கிறது. ஆசைகளை கற்பனைகளில் நிறைவேற்றிக்கொள்ள வழிவகை செய்துகொடுக்கிறது. 'பேண்டசி'கள் மூலம் நாம் விநோத சந்தர்ப்பங்களுக்குள் எளிதாக நுழைகிறோம், அட்டகாசமாய் அங்கிருந்தது வெளியேறுகிறோம்.

'பேண்டசி' (fantasy) என்றைக்குமே எனக்குள் சிறகு விரித்தபடியே இருந்திருக்கிறது. மிகச் சிறுவயதில் நான் மந்திரவாதியாய் மாறி எனக்கான உலகத்தை கற்பனையில் உருவாக்கி கொண்டேன். பிறகு சிலகாலம் நான் கிரிக்கெட் வீரனாகி இந்தியாவுக்கு தினம் ஒரு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்துக்கொன்டிருந்தேன். இப்போது இது வேறுமாதிரியாக உருமாறிவிட்டது. எனது இன்றைய 'பேண்டசி'களை விரிவாக சொன்னால் இந்த பதிவுக்கு debonairblogல் லிங்க் கொடுத்து விடுவார்கள். அது வேண்டாம். இந்த முதல் வகையான 'பேண்டசி'களில் நாம் மகிழ்ச்சிக்கான தருணங்களை பல வடிவங்களில் உருவாக்கி கொள்கிறோம்.

நாம் நமக்குள் கற்பனை செய்தது கொள்ளும் எதிர்பாராத தருணங்கள் மற்றும் அதிர்ச்சி தருணங்கள் பற்றிய 'பேண்டசி'கள் வேறு மாதிரியானவை, நமக்கு மிகவும் அந்தரங்கமானவை. நமது இந்த இரண்டாவது வகை 'பேண்டசி' உறவுகள்/ அன்பை சார்ந்து இருப்பவை. இந்த கற்பனைகள் நெருங்கிய உறவினருக்கோ அல்லது நண்பருக்கு மிகப்பெரிய பிரச்சனையோ (அ) ஊனமோ வந்து அவரை நாம் முன்னேற்ற உதவுவது என்ற ரீதியில் இருப்பவை. இந்தவகையான 'பேண்டசி' உலகத்தில் தங்கைக்காக/ அண்ணனுக்காக/ காதலிக்காக தன் சொத்தை/ பதவியை/ உயிரை வழங்கிவிடும் தியாகிகளாக நாம் நம்மை உருவகப்படுத்திக் கொள்கிறோம். இத்தகைய துயர பேண்டசிகளை துருவிக்கொண்டே போனால் மனதின் ரகசிய அறைகளை அடைந்துவிடலாம். ஆனால்,

'மனதின் ரகசிய அறைகளை திறந்து கொண்டே சென்றால் அனைத்தும் அர்த்தமற்றவை ஆகிவிடும்' - விக்கிரமாதித்யன்

சரி, இனி தமிழ் சினிமாவுக்கும் 'பேண்டசி'க்கும் உள்ள உறவுகளை குறித்து பார்ப்போம். தமிழில் பெரும்பாலும் இரண்டு இந்த வகையான 'பேண்டசி' படங்களே அதிகம் நிறைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் வகையான 'பேண்டசி'கள் அதிகம் நிறைந்த படங்கள் மசாலா படங்கள் என்றும், இரண்டாவது வகையான 'பேண்டசி'கள் அதிகம் நிறைந்த படங்கள் யதார்த்த படங்கள் என்றும் அழைக்கபடுகின்றன. ஆகவே 'அங்காடித் தெரு' தமிழ் யதார்த்த படம் என்றவகையில் மிக கச்சிதமாக பொருந்துகிறது. எப்படி? 'பேண்டசி'களே படம் முழுக்க நிறைந்திருப்பதால்தான்.

fantasy 1 - நீங்கள் உங்கள் பள்ளியின் முதல் மாணவர், உங்களால் மேலே படிக்க முடியவில்லை. உங்களுக்காக மக்கள் பரிதாபப்படுகிறார்கள். நீங்களோ தளராமல் முன்னேறுகிறீர்கள்.

fantasy 2 - நீங்கள் தேர்வில் தோல்வி அடைந்தது விடுகிறீர்கள், அதற்காக உங்கள் சொந்தங்கள் வருத்தப்படுகிறார்கள். நீங்கள் உங்கள் மீது வரும் வசைகளை நகைச்சுவையாக மாற்றிவிடுகிறீர்கள்.

fantasy 3 - உங்கள் காதலன்/ காதலி உங்களை அவமானபடுத்திவிடுகிறார். நீங்கள் மானம் பெரிதென உயிரை விடுகிறீர். இதனால் உங்கள் காதலை உணர்ந்த காதலன்/ காதலி பைத்தியமாகி தெரு தெருவாக அலைகிறார்.

fantasy 4 - உங்கள் காதலன்/ காதலி ஊனமாகி விடுகிறார். அவரை விட்டு அனைத்து சொந்தமும் விலகி விடுகிறது. ஆனால் நீங்களோ அவர்மீது கொண்ட அன்புமாறாமல் அவரை மனம்முடித்துக்கொள்கிறீர்கள்.

fantasy 5 - நீங்கள் அனைத்தும் இழந்து தனியனாக உங்கள் காதலன்/ காதலிக்காக அதிகாரமைய்யாமான பணவெறி பிடித்த உங்கள் முதலாளியை எதிர்த்து ஜெயிககறீர்கள்.

படத்துக்கும் மேலும் மூழ்கினால் இன்னும் நிறையா முத்தெடுக்கலாம். ஆனால் இத்துடன் போதும்.. 'பேண்டசி' க்கு தமிழ் அர்த்தம் என்ன என தேடியபோது ஒரு டிக்க்ஷ்ணரியில் 'வீணெண்ணம்' என இருந்தது.

5 comments:

John Vida said...

Interesting!
Thank you!
Visit my blog too!
http://adaavadi.blogspot.com

Yazh Athiyan said...

புனைவு குறித்து அதன் எல்லையற்ற வெளிகுறித்து சொல்லியமை சிறப்பு. தொடர்ந்து எழுதவும்.

Ashok D said...

Righttu...

நந்தாகுமாரன் said...

விஞ்ஞானப் புனைவு மற்றும் அதன் கூறுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்

Karthikeyan G said...

John Vida, thanks..

Yazh Athiyan, thanks..

//தொடர்ந்து எழுதவும்.// கண்டிப்பாக.. :)

D.R.Ashok, ரைட்டுணா சரி.. :)

Nundhaa, Thanks!!

//கட்டுரை எழுதுங்களேன்//

அப்ப நான் கட்டுரை முயற்சிகளை தொடரலாமா.. ஹய் ஜாலி... :-)