Thursday 27 May 2010

மறைந்து வாழும் ஞானிகள்.

 
 
எங்கோ இருந்து எங்கோ செல்கையில்
வழிதவறிய நான்கு ஞானிகள்
உலகில் அகப்பட்டு கொண்டனர்.

முதல் ஞானி
தத்துவ நூல்களின் பக்கங்களில்
எழுத்துக்களாய் உறங்கிக் கொண்டான்,
யாராலும் எழுப்ப இயலாதபடி.

இரண்டாவது ஞானி
சாலைகளின் ரத்தக் கறைகளை
மழையில் கழுவிக் கொண்டிருக்கிறான்,
அடுத்த விபத்திற்காக.

முன்றாவது ஞானி
உங்கள் பிரார்த்தனைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறான்,
கடவுளுக்கு புரியாத மொழியில்.

கடைசி ஞானியோ
எனக்குள்ளே அமர்ந்து கொண்டான் -
என்னை அழித்துவிட்டு.

7 comments:

நேசமித்ரன். said...

நல்லா இருக்கு கார்த்தி !

கன்கொன் || Kangon said...

நல்லா இருக்கு.... :)))

Ashok D said...

:)

Ashok D said...

மௌனமாய் போய்விடவேண்டுமென்று தான் நினைத்தேன் முடியவில்லை....

//உங்கள் பிரார்த்தனைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறான்,
கடவுளுக்கு புரியாத மொழியில்//

ரசிக்க வைத்தது ... டாப் man



அடுத்தது

//எளிதாய், எனக்குள்ளே அமர்ந்து கொண்டான் -
என்னை அழித்துவிட்டு//

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு கார்த்தி.

நந்தாகுமாரன் said...

அற்புதம்

மணிகண்டன் said...

Wow ! This guy is rocking :)-