Tuesday 28 June 2011

நான் மலையேறுவதற்காக இந்த அடிவாரத்திற்கு வந்துசேரவில்லை.
நீங்கள் மலையேறுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
ஒரு சிறு தூனைப் போல்,
ஒரு வேப்பம் மரத்தைப் போல்.

நான் மலையுச்சியை எற்கனவே கண்டவனா, இல்லை
ஏற முயற்சித்து பல தோல்வி கண்டவனா இல்லை
மலையை முதல் முறை பார்ப்பவனா’ என்பதையெல்லாம்
முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

நான் வெறுமனே இந்த அடிவாரத்தில் நின்றிருப்பேன்,
’நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறான்’ என்ற
எண்ணத்தை உங்களுள் விதைப்பதற்காக.

நீங்கள் மலை ஏறுங்கள்.

2 comments:

Yazh Athiyan said...

Nalla kavithai. sirappu.

Yazh Athiyan said...

கவிதை சிறப்பு. கண்காணிக்கும் கவிதையின் குரல் . காலத்தின் குரலாக அமைவதற்கான யத்தனம் கவிதையில் உள்ளது. நன்று. தொடர்ந்து எழுதவும்.