Sunday 1 January 2012

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை.

பரபரப்பான நெடுஞ்சாலையின் ஓரத்தில் காத்திருக்கும் அந் நத்தை,
சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.

சாலையின் அகலம் நத்தைக்கு உதவும்படியில்லை,
வாகனங்களின் போக்குவரத்தும் குறையும்பாடில்லை,
எப்போதும் முதுகிலிருக்கும் கூட்டின் பாரம்
வேகத்திற்கான தடையாய் அழுத்துகின்றன.
சாலையில் சிறு கறைகளாக தென்படுகின்றன,
முன்பு பயணித்த நத்தைகளின் கல்லறைகள்.
கூறப்படும் எல்லாக் சொற்களும் அச்சத்தை போதித்து
பயணத்தை தடுக்க முயல்கின்றன.

நத்தை நெடுஞ்சாலையை கடந்தாக வேண்டும் உடனடியாக.
சாலையின் மறுபுறத்திலிருந்து விடாமல் அழைக்கிறது
மறுக்கவே முடியாத ஒரு குரல்.

2 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு !

ரிஸ்க் எடுக்கட்டும் நத்தைகளும் & நத்தை மனத்தோடு இருக்கும் மனிதர்களும் :) #ஹைய்ய்ய்கவிதைகலவரபூமியிலநானும் கமெண்டிட்டேனே :))))

Anonymous said...

தலைக்கு மேல் போய் விட்டால் ஜான் போனால் என்ன? மொழம் போனால் என்ன? இல்ல போகாவிட்டால் தான் என்ன?
நாம் எப்போது காட்சியளிப்போம் கர்த்தாவை போலவே !

பார்த்தவுடன் காலை தூக்கி காலை நனைக்கும் நாய்கள் புணர்கையில் சிக்கிக்கொண்டால் பார்த்து பரிகசிப்பதுடன் என் வேலை முடிந்து விடுகிறது!
தலைக்கு மேல் போய் விட்டால் ஜான் போனால் என்ன? மொழம் போனால் என்ன?

இப்படிக்கு,
கரண்ட் மரம்